கண்ணன் பிறந்தான் – எங்கள்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான் – மணி
வண்ணம் உடையான் – உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான் – மணி
வண்ணம் உடையான் – உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் – நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர் – இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
ஏதும் குறைவில்லை, வேதம் துணையுண்டு
புண்ணை ஒழிப்பீர் – இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
ஏதும் குறைவில்லை, வேதம் துணையுண்டு
அக்கினி வந்தான் – அவன்
திக்கை வளைத்தான் – புவியார்
இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் – சுரர்
ஒக்கலும் வந்தார் – சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்
திக்கை வளைத்தான் – புவியார்
இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் – சுரர்
ஒக்கலும் வந்தார் – சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்
மிக்க திரளாய் – சுரர்,
இக்கணம் தன்னில் – இங்கு
மேவி நிறைந்தனர், பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் – உயிர்
கக்கி முடித்தார் – கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை
இக்கணம் தன்னில் – இங்கு
மேவி நிறைந்தனர், பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் – உயிர்
கக்கி முடித்தார் – கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை
சங்கரன் வந்தான் – இங்கு
மங்கலம் என்றான் – நல்ல
சந்திரன் வந்து இன்னமுதைப் பொழிந்தனன்,
பங்கம் ஒன்று இல்லை – ஒளி
மங்குவதில்லை, – இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
மங்கலம் என்றான் – நல்ல
சந்திரன் வந்து இன்னமுதைப் பொழிந்தனன்,
பங்கம் ஒன்று இல்லை – ஒளி
மங்குவதில்லை, – இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள் – கலை
மங்கையும் வந்தாள் – இன்பக்
காளி, பராசக்தி அன்புடன் எய்தினள்,
செங்கமலத்தாள் – எழில்
பொங்கும் முகத்தாள் – திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்
மங்கையும் வந்தாள் – இன்பக்
காளி, பராசக்தி அன்புடன் எய்தினள்,
செங்கமலத்தாள் – எழில்
பொங்கும் முகத்தாள் – திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்
கண்ணன் பிறப்பு |
நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிக் காக்கும்வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள்கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் நம்மை வாழ வைக்கும்இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும்சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்திப்பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இதுஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி என பலபெயர்களில், பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடிமகிழ்கின்றனர்.
5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷபராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல்கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும்ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதிஉள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதைஅறியலாம். ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும்பிரசித்தம். இந்த திதிகளில் எந்தவிதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளைதொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்தநடைமுறைகூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.
மற்ற திதிகள்போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டேராமாவதாரத்தில் மகா விஷ்ணு, நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்ததினத்தை ஸ்ரீராமநவமி என்று கொண்டாடுகிறோம். கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமிதிதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தைகோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்’என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியிருப்பதன்வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள்,தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதேகோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசிமாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில்தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால்பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்துவீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்குபிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல்போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்துபூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ண கண்ணன் நம் இல்லம் வந்துஅருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறுபாடியருளியுள்ளார்.
‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூவித்தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்...’
என்று பாடியருளி, விஷ்ணுவை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும்,பிழைகளும் தீயினில்பட்ட தூசாக அழியும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆவணி மாதத்தில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். இந்தஆண்டு ஆடி மாதத்தில் ஒன்றும் ஆவணி மாதத்தில் ஒன்றும் வருகிறது. நாளைகோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்திவருகிறது.
No comments:
Post a Comment